Monday, November 10, 2014
இந்த பிரச்சினையில், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தரக்குறைவாக மத்திய அரசையும், மோடியை இழிவுபடுத்தும் வகையிலும் அவலமான வார்த்தைகளால் மதிமுக பொதுச்செயலர் (புலி பினாமி) வைகோ விமர்சனம் செய்திருப்பது கண்டிக் கத்தக்கது.
ஈரோடு::பிரதமர் நரேந்திர மோடி பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த மதிமுக பொதுச்செயலர் (புலி பினாமி) வைகோவுக்கு, பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ராமேசுவரத்துக்கு வந்த மத்திய தரைவழிப் போக்குவரத் துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை நேரில் பார்க்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார். எனவே, மீனவர்கள் தங்களது போராட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.
இந்த பிரச்சினையில், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தரக்குறைவாக மத்திய அரசையும், மோடியை இழிவுபடுத்தும் வகையிலும் அவலமான வார்த்தைகளால் மதிமுக பொதுச்செயலர் (புலி பினாமி) வைகோ விமர்சனம் செய்திருப்பது கண்டிக் கத்தக்கது.
மோடியை தரக் குறைவாக விமர்சிப்பதை ஏற்கமாட்டோம். எதிர்கால அரசியலுக்கு வேறு வழியை கண்டுபிடித்து விட்டதால், அதற்கேற்ப பேசுவது போல (புலி பினாமி) வைகோவின் பேச்சு உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக இதுவரை வைகோ அறிவிக்கவில்லை. எங்களது கூட்டணியில் இருப்பதை வைகோதான் முடிவு செய்ய வேண்டும்.
மின்இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மின்கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது. நதிநீர் இணைப் புக்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. தென்மாநில நதிகள் முதல்கட்டமாக இணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment