Friday, November 21, 2014

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சி மடத்துக்கு வந்தடைந்தனர்!

Friday, November 21, 2014
ராமேஸ்வரம் : இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 5 தமிழக  மீனவர்கள் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சி மடத்துக்கு  வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்கு ராமேஸ்வரம் மாவட்ட எஸ்.பி அன்வர் ராஜா தலைமையில் 5 மீனவர்களுக்கு வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர். குழந்தை இயேசு ஆலையத்தில் 5 மீனவர்களுக்கும்  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
 
போதை பொருள் கடத்தியதாக  தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேருக்கும் ராஜபக்சே பொது மன்னிப்பு வழங்கியதையடுத்து 5 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
 
இந்திய தூதரக ஏற்பாட்டின் படி கொழும்பில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்பும் 5 மீனவர்களும் நேற்று டெல்லி வந்தடைந்தனர். தாயகம் திரும்பியதும் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை மீனவர்கள் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர். இருநாட்டு ராஜ்ய ரீதியிலான பேச்சு மூலம் நாங்கள் தாயகம் திரும்பினோம் என்று மீனவர்கள் தெரிவித்தனர். தூக்கு விதிக்கப்பட்ட நாள் மட்டுமே நாங்கள் கவலை அடைந்திருந்தாக தெரிவித்த மீனவர்கள் எங்களை கண்டிப்பாக மீட்பதாக இந்திய அதிகாரிகள் உறுதி அளித்தது நம்பிக்கை தந்தது.
 
தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு மிகுந்த நன்றி தெரிவித்துக்கொள்வதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் தங்களை மீட்க நடவடிக்கை எடுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனர். 

No comments:

Post a Comment