Friday, November 21, 2014

மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை: சுஸ்மா சுவராஜ்!

Friday, November 21, 2014
புதுடெல்லி::இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக இந்தியா அறிவித்துள்ளது. மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து இலங்கையுடன் பேச ஆர்வம் காட்டுவதாக வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் வரையில் இந்திய மீனவர்கள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடக் கூடாது என சுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவதனை மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் பிரச்சினைகள் குறித்த இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்களும், 79 படகுகளும் தடுத்து வைக்க்பபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment