Tuesday, November 18, 2014
திருச்சி::திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அங்குள்ள புலிகளுக்கு ஆதரவான 20 பேர் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் காலவரையற்று தங்களை சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைத்துள்ளதை கண்டித்தும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் கடந்த 15-ம் தேதி முதல் நான்கு நாட்களாக இலங்கை அகதிகள் 26 பேர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், புலிகளுக்கு ஆதரவான போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் எந்த விதத்திலும் செவி சாய்க்கவில்லை. எனவே மனமுடைந்த போராட்டக்காரர்களில் சந்திரகுமார், ஈழ நேரு, சுரேஷ் குமார், உதயதாஸ், ஸ்ரீஜெகன், மகேஸ்வரன், சிவநேஸ் சரண், மகேஸ்வரன், மூர்த்தி, சதீஷ்குமார், கிரிதரன் , யுகப்பிரியன், சுபாகரன், ரமேஷ், முஹம்மது சாதிக், ராஜேந்திரன், சிவகுமார், பாலச்சந்திரன், ஞாணவ உதயன், கருணை ராஜ் ஆகிய 20 பேர் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்தனர்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்காத காவல்துறையினர், போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment