Tuesday, November 18, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி யாழ்ப்பாணத்திலுள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறி மற்றும் கௌரவ அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவாநந்தா அவர்களின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடு ஒன்று இன்று (18) காலை இடம்பெற்றது.

இதன்பிரகாரம் ஜனாதிபதி அவர்களை வாழ்த்தியும் நல்லாசி வேண்டியும் ஆலய பிரதம குரு துரைச்சாமி குருக்கள் தலைமையில் இச்சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் விசேடமாக இந்து குருமார்கள் வேதம் ஒதி ஜனாதிபதி அவர்களுக்கு நல்லாசி வேண்டி சிறப்புப் பூசைகளை முன்னெடுத்தனர். இதன்போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, ஜனாதிபதியின் இந்துசமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் பாபுசர்மா குருக்கள் மற்றும், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறிமோகனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டிலும் ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் யாழ் மருதடி விநாயகர் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த பூஜை வழிபாட்டில் யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் உட்டபட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களினாலும் இன்றையதினம் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவிப்பிரமாணம் மற்றும் நாட்டுக்கும் முப்படையினருக்கும் ஆசி வேண்டி திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் பிரார்த்தனை நேற்று இரவு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி திஸ்ஸ ரஞ்சித் டி சில்வாவின் தலைமையில் திருமலை ஸ்ரீ ஜயசுமனராம விகாரையில் நடைபெற்றது.
மூவின மக்களையும் சேர்ந்த பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். 30 வருடகால யுத்தத்தை இல்லாதொழித்து சகல இன மக்களும் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழ வழிசமைத்த மாபெரும் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சகல மக்களும் ஒத்துழைப்பு வழங்குவது நாட்டின் சுபீட்சத்திற்கு ஏதுவாக அமையுமென்றும் அதற்கு தங்களது ஆசிகளை தெரிவிப்பதாக இதன்போது கலந்து சிறப்பித்த பௌத்த மத குருமார்கள் தெரிவித்தார்கள்.
இவ்விசேட நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா- உதவி மாவட்ட செயலாளர் பாத்திய விஜயந்த- பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஜலதீபன் உட்பட அரச ஊழியர்கள் பொதுமக்கள் படையினர் என பலரும் கலந்து கொண்டார்கள்.

ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷவின் 69ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்ர் ஆலயத்தில் இன்று (18) விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்து மாமாங்கேஸ்வர் ஆலய வளவில் மர நடுகையும் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகளில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான அருண் தம்பிமுத்து பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புடனும் இன்று மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப்பிரிவுளிலும் விசேட பூஜைகளும் வழிபாடுகளும் மரநடுகையும் நடைபெற்றன.
பிரதேச செயலக ரீதியாக, மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம், கன்னன்குடா கண்ணகை அம்மன் ஆலயம், ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலயம், களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயம், கிரான் சித்தி வினாயகர் ஆலயம், களுமுந்தன் வெளி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், மாவடிவேம்பு காணி அம்மன் ஆலயம், வாழைச்சேனை கைலாயப்பிள்ளையார் ஆலயம், வாகரை சௌபாக்கிய பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் வழிபாடுகள் நடைபெற்றன.
இதேபோன்று ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும், மர நடுகைகளும், ரத்ததான முகாம்களும் நடைபெற்றன.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகள் மர நடுகைகளில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஜா, ஏறாவூர் பற்று சுதந்திரக்கட்சி அமைப்பாளர் எ.கைலேஸ்வரராஜா, உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா, கலாசார உத்தியோகத்தர், கிராம சேவையாளர்கள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment