Friday, November 14, 2014

நோர்வேயுடன் இணைந்து 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் புலிகளுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Friday, November 14, 2014
இலங்கை::நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குமாறு  கோரும் எதிர்க்கட்சியினர்,  நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அமர்வில் கலந்து கொள்ளாததை மறந்து உரையாற்றுகின்றனர்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'1972ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இரண்டு வருவங்கள் சென்றது. ஆனாலும் 13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற 24 மணித்தியாலமும் செல்லவில்லை' என்றும் அவர் தெரிவித்தார்.

கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிராம அதிகாரிகளை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை(13) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இன்று எதிர்க்கட்சியினர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க கோறி பாரிய ஆர்ப்பபாட்டங்களை நடத்துகின்றனர். ஆனாலும் யுத்தம் முடிவடைந்த பின் அரசியல் யாப்பில் தேவையான மாற்றங்களை செய்வதற்காக நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒன்றை அமைத்தேன்.
அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா அதன் தலைவராக இருந்தார்.

சில அமர்வுகளும் இடம்பெற்றன. இருந்தாலும் எதிரக்; கட்சியினர் இதில் கலந்துகொள்ளவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இதில் கலந்துகொள்ளவில்லை. இதனால் இத் தேர்வுக் குழவை முன்னெடுக்க முடியவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி 2002ஆம் ஆண்டு அரச சேவையை மட்டுப்படுத்தி மூன்று இலட்சத்துக்கு குறைக்க திட்டமிட்டிருந்தது. எனவே அரச சேவைக்கு ஒருவர்கூட சேர்க்கப்படவில்லை.

ஆனாலும் இன்று 14 இலட்சத்துக்கம் அதிகமான அரச ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளது.

1972ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இரண்டு வருவங்கள் சென்றது. ஆனாலும் 13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற 24 மணித்தியாலமும் செல்லவில்லை.

ஹெலிகொப்டர் மூலம் சட்ட மூலம் நாடாளுமன்றத்துக்கு  கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவுகளை நாம் அனுபவித்தோம்.

நிறைவேற்று அதிகாரத்தினால் நான் ஒரு சர்வாதிகாரி என எதிர்க்கட்சியினர் கோசம் எழுப்புகின்றனர். நான் நிறைவேற்று அதிகாரத்தை நாட்டின் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும் நாட்டை அபிவிருத்தி செய்யவுமே பயன்படுதி  உள்ளேன்.

2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் நோர்வேயுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். அவர்களுக்கு அப்போது நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் இருக்கவில்லை. ஆனாலும் நாடாளுமன்ற அதிகாரத்தை தவரான முறையில் பபயன்படுத்தியே இவ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவுகளுக்கே நானே முகம் கொடுத்தேன். யுத்தம் தற்போது முடிவுக்கு கொண்டுரப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு பாரிய அளவில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது எவ்வாறு சாத்தியமாகும் என சிலர் வினவுகின்றனர். யுத்தத்துக்காக தற்போது பணம் செலவாவதில்லை. அரிசி உற்பட பல தானியங்கள் இறக்குமதிக்காக தற்போது பணம் செலவாவதில்லை. இப் பணத்தை பயன் படுத்தியே மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன.

கடந்த காலங்களில் அரசியல் காரணங்களுக்காக தகைமையற்றவர்கள் அரச சேவைக்கு சேர்க்கப்பட்டனர். இருந்தபோதும் எங்களது அரசாங்கம் அவ்வாறு இல்லாமல் தகுதியுள்ளவர்களை மட்டுமே அரச சேவையில் சேரத்துக்கொண்டது. அதன் பலனை நாங்கள் தற்போது அனுபதித்து வருகினறோம்' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment