Monday, November 17, 2014
பெய்ரூட்,::ஈராக் மற்றும்
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தனிநாடு
அமைத்துள்ளனர். அங்கு தங்களை எதிர்ப்பவர்கள் மற்றும் மலைவாழ் பழங்குடிகள்
மற்றும் மைனாரிட்டி இனத்தவர்களை கொன்று குவிக்கின்றனர்.
மைனாரிட்டி
இன பெண்களை கடத்தி சென்று அடிமைகளாக விற்கின்றனர். மேலும் தங்களை
எதிர்க்கும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த
பிணைக்கைதிகளை கடத்தி சென்று தலை துண்டித்து படுகொலை செய்கின்றனர்.
அதை
வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி
ஏற்படுத்துகின்றனர். நேற்று சிரியாவில் அமெரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவன
ஊழியர் பீட்டர் எட்வர்டு காஸ்சிக் என்பவரை தலை துண்டித்து கொலை செய்தனர்.
இந்த
வீடியோவை வெளியிட்டு அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தனர். அதே வீடியோவில்
சிரியாவை சேர்ந்த 18 ராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்தும் படுகொலை செய்த
கொடூர காட்சி இடம் பெற்றிருந்தது.
இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில்
வைத்து படுகொலை செய்யப்பட்டனர். 18 சிரியா ராணுவ வீரர்களும் மண்டியிட்டு
கத்தியுடன் நிற்கும் தீவிரவாதிகள் அவர்கள் தலை துண்டித்து கொலை செய்யும்
கொடூர காட்சி ரத்தத்தை உறைய வைப்பதாக உள்ளது.

No comments:
Post a Comment