Monday, November 17, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி வடக்கு மக்களின் நலன்கள் பற்றி மட்டுமே கவனம்: பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின்!

Monday, November 17, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி வடக்கு மக்களின் நலன்கள் பற்றி மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக பிரதி அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். கிழக்கு வாழ் மக்களின் நலன்களை உறுதி செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த முனைப்பையும் காட்டுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எவ்வித சேவையையும் ஆற்றுவதில்லை என்பதே ஆளும் கட்சியின் குற்றச்சாட்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு களுவளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் எவ்வித அச்சமும் இன்றி கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து கிழக்கில் தாம் சமாதானத்தை நிலைநாட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது எனவும், வேட்பாளர் ஒருவரைத் தெரியும் ஆற்றல் கூட எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment