Monday,October, 13, 2014
இலங்கை::2014.10.02 ஆம் திகதி நடை பெற்ற கூட்டத் தில் தமிழ் தேசி யக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் மத்தியில் கூர்மையான பிளவு தோன்றியுள்ளது நன்கு வெளிப்பட்டது. இலங்கைத்
இலங்கை::2014.10.02 ஆம் திகதி நடை பெற்ற கூட்டத் தில் தமிழ் தேசி யக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் மத்தியில் கூர்மையான பிளவு தோன்றியுள்ளது நன்கு வெளிப்பட்டது. இலங்கைத்
தமி ழரசுக் கட்சியின் அங்கத்தவர்களில் ஒரு பிரிவினர், தமிழ் தேசியக் கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் தமிழ் ஆயுதக்குழு அங்கத்தவர்களோடு உள்ள கூட்டை தாங்கள் விலக்கிக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள் ளார்கள். அதனால் அந்தக் கூட்டம் எதுவித தீர்மானமும் மேற்கொள்ளா மல் முடிவடைந்தது.
அத்துடன் தற்பொழுது தமிழ் தேசி யக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வட மாகாணசபை முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரனும், முன்னாள் ஆயு தக்குழு அங்கத்தவர்களுடன் தன்னைத் தொடர்பு படுத்திக் கொள்வது தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று சொன் னதாக அறிக்கைகள் தெரிவிக்கின் றன. வட மாகாணசபை முதலமைச்ச ரின் அறிவிப்பு, முன்னாள் ஆயுதக்குழு அங்கத்தவர்கள் என அழைக்கப்படுப வர்கள் மத்தியில் கடும் கண்டனங்க ளையும் மற்றும் நிந்தனைகளையும் தோற்றுவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட் டம் யாழ்ப்பாணம், சோமசுந்தரம் வீதி யில் உள்ள வட மாகாணசபை முதல மைச்சரின் அலுவலகத்தில் நடைபெற் றது. முன்னர் இந்தக் கூட்டத்தை யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடத்தத் திட்டமிடப்பட் டிருந்தது.
வட மாகாணத்தை சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை முதலமைச்சர், வட மாகாண சபை தலைவர் மற்றும் அமைச்சர் கள் குழு ஆகியோர் பங்குபற்றுவதற் கான வசதிகள் ரி.என்.ஏ யின் அலுவ லகத்தில் இல்லாததால் கூட்ட நிகழ்ச்சி வட மாகாணசபை முதலமைச்சரின் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது.
முதலமைச்சரின் அலுவலகத்துக்கும் மற்றும் அதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளுக்கும் வட மாகாணசபை மாதாந்தம் மூன்று லட்சம் ரூபாய்க ளைச் செலுத்துகிறது, அதனால் அதை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத் துவது ஒரு கண்டிக்கத்தக்க செயல் என்பதை இங்கு நினைவுகூர வேண்டும்.
ரி.என்.ஏயின் கூட்டத்துக்கு ஆர்.சம் பந்தன் தலைமை தாங்கினார். மற்றும் அங்கு காணப்படாத குறிப்பிடத்தக்க ஒரு வரவு இலங்கைத் தமிழரசுக் கட் சியின் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவரான மாவை எஸ்.சேனாதிரா ஜகுவினதாகும், அவர் ஒரு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்' யாழ்ப்பாண குடாநாட்டுக்கு விஜயம் செய்வதற்காக முன்மொழியப் பட்டிருக்கும் வருகையின்போது ரி.என்.ஏ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றி முடிவு செய்வதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகி யோரின் நிதியை பயன்படுத்தி எப்படி அபிவிருத்திகளைச் செய்யலாம் என் பது பற்றித் தீர்மானிக்க ஒரு குழுவை அமைப்பது மற்றும் வட மாகாண சபை யின் செயற்படாமை பற்றி ஆராய்வது போன்ற விடயங்களும் அந்தக் கூட் டத்தில் தீர்மானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்' யாழ்ப்பாணத்துக்கு வரும் பொழுது, ரி.என்.ஏ பின்பற்ற வேண்டிய செயற் பாடுகள் சம்பந்தமாக அந்தக் கூட்டம் ஒருமித்த உடன்பாட்டை எட்டத் தவறி விட்டது என்று ஏசியன் ட்ரிபியுனலால் அறிய முடிந்தது. ரி.என்.ஏயில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் தங்கள் செயற்பாட்டு நடவடிக்கைகளை முன் வைப்பதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்' யாழ்ப்பாணத்துக்கு வரும் போது அதைப் பின்பற்ற வேண்டும் என்று சம்பந்தன் சொன்னதாக அறிக் கைகள் தெரிவிக்கின்றன. அதில் பங் கேற்றவர்கள் இந்த தீர்மானத்தை ஏற் றுக் கொள்ளாததால் பதட்டம் நிலவி யது. அதைத் தொடர்ந்து இந்த விட யம் தொடர்பாக ஒரு ஒருமித்த முடிவை எடுப்பதற்காக ஒக்டோபர் 6 ஆம் திகதி மீண்டும் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதற்கு மேலதிகமாக கூட்டத்தில் பங்குபற்றிய அநேகர், வடமாகாண சபை பதவிக்கு வந்து, இதுவரை ஒரு வருடம் கடந்து விட்டது, மற்றும் மாகா ணத்தில் எந்த உருப்படியான அபிவி ருத்தி செயற்பாடுகளையும் நடப்பாக்க உறுதியான நடவடிக்கை எதுவும் மேறகொள்ளப்படவில்லை என்று குற் றம் சாட்டினார்கள். சில பாராளு மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் வட மாகாணசபை முதலமைச்சரின் செயலற்ற தன்மை மற்றும் மாகா ணத்தில் அபிவிருத்தி நடவடிக்கை களை மேற்கொள்ளாத அவரது இய லாத் தன்மை என்பனவற்றைப் பற்றி குற்றம் சுமத்தினார்கள்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது உணர்ச்சிவசமான பதிலுரையில், முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்களின் அங்கத்தவர்கள் மத்தியில் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வது தனக்கு மகிழ்ச்சியை தரவில்லை என் றும் அதனால்தான் இலங்கைத் தமிழ ரசுக் கட்சியுடன் இணைந்திருப்பதா கவும் தெரிவித்ததாக ஏசியன் ட்ரிபியு னலால் அறிய முடிந்தது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு கடும் விமர்சனம், கண்டனம், எச்சரிக்கை என்பனவற்றை எழுப்பியதோடு, அதில் பங்குபற்றிய ஒரு பாராளுமன்ற உறுப் பினர், இலங்கைத் தமிழரசுக் கட்சி, விக்னேஸ்வரனை வட மாகாணசபைத் தேர்தல்களில் பொது வேட் பாளராக முன்மொழிந்த போது, தான் பொது வேட்பாளராக வரவேண் டுமானால் ரி.என்.ஏயில் அங்கம் வகிக்கும் அனைத் துக் கட்சிகளும் ஒருமித்த முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று விக் னேஸ்வரன் வலியுறுத்தி யதை நினைவு கூர்ந்தார்.
மற்றொருவர், தேர்தல் பிரச்சாரங்களின்போது விக்னேஸ்வரன், எல்;.ரீ.ரீ.ஈ தலைவர் வே.பிரபாகரனை மாபெரும் தமிழ் வீரன் என புகழ்ந்த தாக அறிந்தோம், ஆனால்; இப் போது அவர் முன்னாள் தமிழ் ஆயு தக் குழுக்களின் தலைவர்களுடன் கூட்டுச் சேர தயாரில்லை என்று எப் படிச் சொல்லாம் என்று கேட்டார். விக் னேஸ்வரனின் இரட்டை நாக்கு கூட் டத்தின் கவனத்தை ஈர்;த்ததுடன் கண் டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட நேரமாக பதட்டம் நிலவியது மற்றும் அதற்கிடையில் வழக்கம் போல சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியற் கட்சி யாக பதிவு செய்வது தொடர்பாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பதிலை கூறத் தவறிவிட்டார், மற்றும் கூட்டம் மணிக் கணக்காக இழுபட்டது - வழக் கம்போல ரி.என்.ஏயின் இதர அங்கத்துவ கட்சி கள் இலங்கை தமிழரசுக் கட்சி பற்றி அவமதிப்புகளை பரிமாறுவதும் அதன் ஆதிக்க வெறியை திட்டித் தீர்ப்பதும் நடந்தேறியது.
சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிப் பதன்படி, தமிழ் தேசியக் கூட்டமைப் பில் அங்கம் வகிக்கும் முன்னாள் தமிழ் ஆயுதக் குழு அங்கத்தவர்கள், சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்ட நடவடிக்கைகளில் திருப்தி அடை யவில்லை, அவர்கள் திரும்பவும் தனி யாக கல்வியங்காட்டில் உள்ள ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரே மச்சந்திரனது வீட்டில் சந்தித்தார்கள். முன்னாள் தமிழ் ஆயுதக் குழு தலை வர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியற் கட்சியாக பதிவு செய் வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது எனத் தீர்மானித்தார்கள்.
ரி.என்.ஏயினை கட்டுப்படுத்தும் விதி கள் மற்றும் ஒழுங்கு முறைகளை தயா ரிப்பது என்றும், ரி.என்.ஏயினை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பான தீர்மானத்தை, தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்காக சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் கையளிப்பது என்றும் அங்கு தீகுமானங்கள் மேற்கொள்ளப்பட்ட தாக ஏசியன் ட்ரிபியுனல் அறிந்தது.
அது மேலும் தெரிந்து கொண்டது, இலங்கைத் தமிழரசுக் கட்சி ரி.என்.ஏயினை ஒரு அரசியல்கட்சியா கப் பதிவு செய்வதற்கான நடவடிக் கைகளை முன்னெடுக்க தயாராக இல்லாவிட்டால், பின்னர் முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்களின் தலைவர் கள், வரப்போகும் அடுத்த பாராளு மன்ற தேர்தல்களில் வேட்பாளராக நிய மனம் பெறுவதற்கு இலங்கைத் தமிழ ரசுக் கட்சியின் கருணையை எதிர்பா ராமல் தனியாகச் சென்று ஜனவரி 2015 ல் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய் வார்களாம் என்று.


No comments:
Post a Comment