Monday, October 13, 2014

யாழ்ப்பாண மக்களுக்கு இன்று குதூகலமான நாள். அவர்களது வாழ்வுக்கு ஒளியேற்றும் வசந்த நாள் என்று கூட இன்றைய நாளைச் சொல்லலாம்!

Monday,October, 13, 2014
இலங்கை::யாழ்ப்பாண மக்களுக்கு இன்று குதூகலமான நாள். அவர் களது வாழ்வுக்கு ஒளியேற்றும் வசந்த நாள் என்று கூட இன்றைய நாளைச் சொல்லலாம்.
தீபாவளிக்கு இன்னும் 9 தினங்களே (22.10.2014) இருக்கின்ற நிலையில் அரக்கத் தனங்களை உடைத்தெறிந்து தீப ஒளியோடு ‘யாழ்தேவி’ இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைகிறது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்தேவி இன்று யாழ்ப் பாணத்தை முத்தமிடுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் கள் இன்று (13.10.2014) சுபவேளையில் யாழ்தேவி ரயில் சேவையை பளையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கிறார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த கையோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வட பகுதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி இன்றைய தினத்தில் நிறைவேற்றப்படுகிறது.

யாழ்தேவி’, வட பகுதி மக்களின் முக்கிய உயிர் நாடியாக விளங் கியது. அதேநேரம் வடக்குக்கும் தெற்கிற்கும் உறவுப் பாலம் அமைத்து வட மாகாண மக்களின் பொருளாதாரத்துக்கு பெரும் உந்து சக்தியாகவும் திகழ்ந்தது.

புலிகளின் கொடிய பயங்கரவாதம் போக்குவரத்தைத் துண்டித்தது மட்டுமல்ல, ரயில் பாதைகளையும் நிர்மூலமாக்கியது. இதனால் 1990 ஆம் ஆண்டு ஜூலை நடுப்பகுதியில் யாழ் புகையிரதம் வட பகுதிக்கான தனது பயணத்தை நிறுத்திக் கொண் டது. அன்றிலிருந்து வடபகுதி மக்களின் குறிப்பாக யாழ்குடா நாட்டு மக்களின் வாழ்வும் நிர்மூலமாக்கப்பட்டது.

கற்பனாவாதத்தில் உருவான புலிகளின் ஈழம் என்ற மாயையை வைத்துக் கொண்டு புலிகள் நடத்திய காட்டுத்தர்பார் வடக்கு, தெற்கு உறவைத் துண் டித்தது மட்டுமல்ல, வட மாகாண தமிழ் மக்களின் வாழ்க்கையை துவம்சம் செய்தது.

வெளித்தொடர்புகளின்றி இந்த மக்கள் பூட்டிய அறைக்குள் வைக்கப் பட்டவர்கள் போன்றே 30 ஆண்டுகாலம் இருளில் வாழ்க்கையை ஓட்டினார்கள். ஒரு மனிதனின் வாழ்வில் மூன்று தசாப்த காலம் என்பது வளர்ச்சியின் உச்சத்துக்கு நிகரானதாக இருக்கிறது. வட மாகாணத்தில் இந்த இருள் சூழ்ந்த காலப் பகுதியினுள் பிறந்த இளம் சந்ததியினருக்கு இன்னும் வெளியுலகமே தெரியாமல் இருக்கிறது.

யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் அதாவது 2011 ஆம் ஆண்டு முற்பகுதியில்தான் வட பகுதிக்கான ரயில் பாதை திருத்தப் பணிகள் ஆரம்பமாகின. இந்திய அரசுக்கு முழுக்க முழுக்கச் சொந்தமான இர்கோன் (IRCON) நிறுவனம் திருத் தப் பணிகளை முழுமையாகப் பொறுப்பேற்றதுடன் 800 மில். டொலரில் இதனை செய்து முடிப்பதற்கும் ஒப்புதல் அளித்தது.

இர்கோன் நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் தனது பணியை முடித் துள்ளது. காங்கேசன்துறை வரையான ரயில் பாதை பணிகளில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும், டிசம்பர் மாதத்தினுள் அதுவும் நிறைவு பெற்றுவிடுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வட மாகாணத்துக்கான ரயில் பாதை 1894 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. என்றாலும், 1905 முற்பகுதி யில் தான் யாழ்ப்பாணத்துக்கான முதலாவது ரயில் வந்தடைந் ததாக ஆவணக் குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது. முதலா வது ரயில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது மக்கள் மேள தாளங்களோடு வரவேற்றதோடு ஆச்சரியத்தோடும் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 109 ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கின்ற நிகழ்வு அதுவாகும். அதேபோல இன்று 25 ஆண்டுகளின் பின்பு யாழ் மண்ணில் கால் பதிக்கும் யாழ் தேவிக்கு யாழ் குடாநாட்டு மக்களால் கோலாகல வரவேற்பளிக்கப் படுகிறது என்பது மகிழ்ச்சியானது.

உண்மையில், யாழ்தேவி வட மாகாண மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சேவையாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டு மக் கள் கடின உழைப்பால் முன்னேறுபவர்கள். சுய உழைப்பில் நம் பிக்கை கொண்டு வாழும் இந்த மக்களின் உற்பத்திகளை தென் பகுதிக்குச் சந்தைப்படுத்துவதில் யாழ்தேவி பெரும் பங்கு வகித் துவந்தது.

சுமார் கால் நூற்றாண்டுகளின் பின் வட பகுதி மக்களின் வாழ்வில் பொருளாதார சுபிட்சத்துக்கு மீண்டும் யாழ்தேவி ஒளி யேற்றப் போகிறதென்பது யாழ் குடாநாட்டு மக்களுக்கு புத்துணர் வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் வட மாகாண சபையை ஆளுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடந்துகொள்ளுகின்ற விதம் வடபகுதித் தமிழர்களை அதல பாதாளத்துக்குள் தள்ளிவிடுவது போலவே இருக்கிறது.

வட மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக் கப்படுகிறது. வட மாகாணத்தில் 5 மாவட்டங்களையும் உள்ள டக்கிய விசேட அபிவிருத்திக் கூட்டமும் ஜனாதிபதி தலை மையில் இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவிருக் கிறது. இவை அனைத்தையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், மாகாண சபையும் புறக்கணிக்கத் தீர்மானித்திருக்கிறது.

மக்களுக் கான அபிவிருத்தி பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கும் போது அவைகளில் பங்குபற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுதான் அரசியல் நாகரிகம் என்பதை தமிழ்க் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும்.

குறை நிறைகள் இருந்தால், அவைகளுக்குப் பேசித்தான் தீர்வுகாண வேண்டும். முரண்பாட்டு அரசியலை வளர்த்துக் கொண்டு மக்களின் எதிர்கால சுபிட்சத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பு தடையாக இருப்பது ஆரோக்கியமானதல்ல. எதிர்ப்பு அரசியலால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை என்பதை கடந்த காலங்களில் இருந்து கூட்டமைப்பு படிப்பினைகளாகக் கொள்ள வேண்டும்.

வடக்கு மக்களின் பொருளாதார சுபிட்சத்துக்கான மக்கள் நலத்திட்டங் கள் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் போது, அரசியல் வேறுபாடுகளை மறந்து சகல கட்சிகளும் ஒத்து ழைப்பு வழங்குவதுதான் வடக்கு மக்களுக்கு செய்யும் பேருதவியாகும். 

No comments:

Post a Comment