Tuesday, October 21, 2014

ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் தடையை நீக்கியமை தொடர்பில் சட்டரீதியாக சவால்விடுக்க வேண்டுமெனின் அதற்காக அரசாங்கத்துக்கு உதவ தயார்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!

Tuesday, October 21, 2014
இலங்கை::ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் தடையை நீக்கியமை தொடர்பில் சட்டரீதியாக சவால்விடுக்க வேண்டுமெனின் அதற்காக அரசாங்கத்துக்கு உதவ தயார் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
 
எனினும் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்ட தோல்வியே இந்த நிலைமைக்கு காரணம் என்று சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
 
இந்தநிலையில் நாட்டை பாதுகாப்பதற்காக அறிவையும், திறமையையும் பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று இச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
இதேவேளை பயங்கரவாத அமைப்பான புலிகளின் தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியமை குறித்து தாம் அதிர்ச்சியடைந்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உப்புல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
 
இந்தநிலைமைக்கு இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சே பொறுப்பேற்க வேண்டும் என்று ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment