Tuesday, October 21, 2014
இலங்கை::ஸ்ரீ லங்கன் விமானச் சேவையை மேலும் விஸ்தரிக்கும் நோக்குடன் ஏ 330 - 300 ரக ஆறு விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 9 விமானங்கள் தருவிக்கப்பட உள்ளதோடு இவை எந்த வகையில் தருவிப்பது என்பது குறித்து அமைச்சர் அமைச்சரவைக்கு விளக்கியுள்ளார். ஏ 330 - 300 ரக ஆறு விமானங்கள் 2014 - 2015 காலப் பகுதியினுள் கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
2017 இலும் மேலும் மூன்று ஏ 350 - 900 ரக விமானங்களை குத்தகை அடிப்படையில் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் முதலாவது விமானம் இம்மாத இறுதிக்குள் இலங்கையை வந்தடைய உள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மேலும் விமானங்கள் தருவிப்பது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன சமர்ப்பித்திருந்தார்.
இதன்படி, 9 விமானங்கள் தருவிக்கப்பட உள்ளதோடு இவை எந்த வகையில் தருவிப்பது என்பது குறித்து அமைச்சர் அமைச்சரவைக்கு விளக்கியுள்ளார். ஏ 330 - 300 ரக ஆறு விமானங்கள் 2014 - 2015 காலப் பகுதியினுள் கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
2017 இலும் மேலும் மூன்று ஏ 350 - 900 ரக விமானங்களை குத்தகை அடிப்படையில் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment