Tuesday, October 21, 2014
இலங்கை::புலிகளுக்கு மீள உயிரூட்ட முயற்சித்த சுந்தரலிங்கம் கஜீபனின் தாய் கனடா செல்வதற்கு புலனாய்வுப் பிரிவினர் தடை விதித்துள்ளனர்.
இலங்கை::புலிகளுக்கு மீள உயிரூட்ட முயற்சித்த சுந்தரலிங்கம் கஜீபனின் தாய் கனடா செல்வதற்கு புலனாய்வுப் பிரிவினர் தடை விதித்துள்ளனர்.
இன்று அதிகாலை கனடா நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் நோக்கில் கஜீபனின் தாயார் சுந்தரலிங்கம் ரஞ்சிதமலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்திருந்தார்.
ஏனினும் ரஞ்சிதமலர் நாட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்க முடியாது என அறிவித்துள்ளனர்.
ரஞ்சிதமலரை அரச புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.35 மணிக்கு கட்டார் விமான சேவையின் மூலம் கட்டார் ஊடாக கனடா செல்ல ரஞ்சிதமலர் முயற்சித்திருந்தார்.
ரஞ்சிதமலரின் பெயர் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கறுப்புப் பட்டியலில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள்
புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அரச புலனாய்வுப் பிரிவினர் ரஞ்சிதமலரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரஞசிதமலரின் பின்புல அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாகவும் அதனை எடுத்து வருமாறு கூறி திருப்பி அனுப்பி வைத்ததாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 9ம் திகதி ரஞ்சித மலருக்கு ஐந்து ஆண்டு கால கனேடிய வீசா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் 10ம் திகதி புலிகளுக்கு உயிரூட்ட முயற்சித்த கஜீபன் கோபி உள்ளிட்ட மூன்று பேர் பதவிய பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment