Tuesday, October 21, 2014
புதுடெல்லி::புலிகள் இயக்கம்மீதான தடையை இந்திய
மத்திய அரசு நீக்குவது தொடர்பில் பரிசிலீக்கும் என்று பாரதிய ஜனதா
கட்சியின் முக்கியஸ்தரான நரேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக
தொலைக்காட்சி ஒன்றில் புலிகள் தொடர்பான விவாதம் ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொலைக்காட்சி ஒன்றில் புலிகள் தொடர்பான விவாதம் ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் புலிகள் இயக்கமீதான தடையை நீக்கியுள்ள விடயம் தொடர்பில் தாம்
அவதானித்துள்ளதாகவும் புதிய இந்திய அரசு பதவி ஏற்று சில நாட்களே ஆகியுள்ள
நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்படாமையினாலேயே புலிகள்மீதான தடை
நீடிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
புலிகள் இயக்கம் எமது
நாட்டின் பிரதமரை படுகொலை செய்திருந்ததாகவும் அந்த படுகொலையை
ஒப்புக்கொள்ளும் விதமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சியில் நடந்த
செய்தியாளர் மாநாட்டில் அதை துன்பியல் நிகழ்வென்பதன் மூலம்
ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாகவே இந்தியா தொடர்ந்தும்
புலிகளை தடை செய்ததாகவும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment