Tuesday, October 21, 2014
புதுடெல்லி::சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி கத்தியை திரையிடச் செய்ய பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி முயன்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கத்தி படத்தை எதிர்ப்பவர்களை குண்டர் சட்டம் அல்லது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படம் என்பதால் "கத்தி' படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்டோம் என்று புலிகள் சார்பு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வேல்முருகன் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு போன்றவை பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையடுத்து "கத்தி' இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், லைக்கா உரிமையாளர் சுபாஷ்கரன், ஐங்கரன் ஓனர் லண்டன் கருணா, நடிகர் அருண் பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லிக்குப் போய், பாஜகவில் சமீபத்தில் இணைந்த, சுப்ரமணிய சாமியை சந்தித்துப் பேசியுள்ளனர். படத்தை சிக்கலில்லாம ரிலீஸ் பண்ண உதவும்படி கேட்டுள்ளார்கள்.
ஏற்கனவே தமிழகத்து ஆளும் கட்சிக்கும், சுப்பிரமணிய சுவாமிக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், அவர்தான் இந்த விஷயத்தில் உதவக்கூடியவர்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதைப்போல, உடனடியாக தனது அதிகாரத்தை காண்பித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
ஆளுநர் ரோசய்யாவை போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக சர்ட்டிபிகேட் கொடுத்த தமிழகத்தில், ஒரு திரைப்படத்தை கூட ரிலீஸ் செய்ய முடியாத நிலைதானே உள்ளது என்று கேட்டுள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமல்ல, காங்கிரஸ் நியமித்த ஆளுநர்களில் நீங்கள் மட்டுமே பதவியில் தொடருவதை நினைத்துப் பாருங்கள் என்று 'நினைவூட்டியுள்ளதாக' தெரிகிறது. சிக்கலில்லாமல் பாதுகாப்புடன் கத்தி ரிலீஸ் ஆகவேண்டும்.
அல்லது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இல்லை என்பது அர்த்தம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக தெரிகிறது. இதைடுத்து தமிழக அரசுடன் பேசி உரிய பாதுகாப்புடன் கத்தியை ரிலீஸ் செய்வதாக ஆளுநரும் உறுதியளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டரில், கத்தி திரைப்படத்துக்கு எதிராக வன்முறை போராட்டம் நடத்துவோரை குண்டர் சட்டம், அல்லது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். ஜெயலலிதாவுக்கு இந்த போராட்டத்தில் சம்மதம்தானா என்று கேட்டுள்ளார்.

No comments:
Post a Comment