Monday, October 20, 2014

புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: (புலி பினாமி) கி.வீரமணி!

Monday, October 20, 2014
சென்னை::திராவிடர் கழக தலைவர் (புலி பினாமி) கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு ஒன்றல்ல; எனவே, பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இருந்து நீக்கி அந்த அமைப்பை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசும் முடிவை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ்நாட்டில் முன்வைக்கப்படுகிறது.

இந்த நேரத்தில் இந்திய அதிகாரிகள் வர்க்கம்பற்றி ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது, சரியானது. ‘‘புலிகள் இலங்கை அரசுக்கு எதிரான மோதல் பிரச்சினையில் இந்திய அதிகாரிகளின் பாகுபாடான நிலைப்பாடு காரணமாக இந்தியத் தரப்பிலான தகவல்கள் நம்பத் தகுந்ததாகக் கருத முடியாது’’ என்று ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத்தின் கருத்தும், கணிப்பும் சாதாரணமானதல்ல.

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான மதிப்பு எந்த வகையில் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அந்தத் தவறுகளுக்குப் பரிகாரமாக, இந்தியாவில் புலிகள் அமைப்பின் மீதான தடையை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும், ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறையில் புதிய மாற்றம் வருமேயானால் அது மிகவும் வரவேற்கத்தக்கதாகவே இருக்கும்.

இவ்வாறு (புலி பினாமி) கி.வீரமணி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment