Monday, October 20, 2014

கொரியாவின் நிதி உதவியின் கீழ் கிளிநொச்சியில் 13 பாடசாலைகள் புனரமைப்பு!

Monday, October 20, 2014
இலங்கை::கொரியாவின் நிதி உதவியின் கீழ் கல்வி அமைச்சின் ஊடாக, கிளிநொச்சி பிரதேசத்தில் 13 பாடசாலைகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன
புலிகள் அமைப்பின் தலைமையகமாகக் காணப்பட்ட மாவட்டத்தில் அமைந்துள்ள இப்பாடசாலைகள், ஏறத்தாழ 30 வருட முரண்பாட்டின் காரணமாக பாழடைந்து சேதமடைந்த நிலையில் காணப்பட்டன.
 
இதற்கமைய, புனித தெரேசா பெண்கள் கல்லூரி, சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, ஸ்ரீ பாரதி வித்தியாலயம், இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கோணாவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, இராமநாதபுரம் மகா வித்தியாலயம், வடக்கச்சி மகா வித்தியாலயம், பிரமந்தனாறு மகா வித்தியாலயம்,
 
தர்மபுரம் மகா வித்தியாலயம், வேராவில் இந்து மகா வித்தியாலயம், இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, கிராஞ்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
 
ஆசிரியர்களுக்கான தங்குமிடங்கள், 100 வரையிலான வகுப்பறைகளைக் கொள்ளக்கூடிய கட்டடங்கள், மஹிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடங்கள் போன்ற மேலதிக வசதிகளும் சில பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment