Monday, October 20, 2014

யுத்தக்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணையாளர்களிடம் வீடீயோ ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள சனல் 4 இன் ஊடகவியலாளர் (புலி பினாமி) கலும்மக்ரே!

Monday, October 20, 2014
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணையாளர்களிடம் தன்னிடமுள்ள வீடீயோ ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள சனல் 4 இன் ஊடகவியலாளர் (புலி பினாமி) கலும்மக்ரே புதிய தகவல்களையும் தான்சேர்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

என்னிடமுள்ள, ஆதாரங்களை ஐ.நா சர்வதேச விசாரணைக்ழுவிடம் வழங்குவதற்க்கு நான் தயாராகவுள்ளேன், இது குறித்து நான் மகிழ்ச்சி கொண்டுள்ளேன், விரைவில் நான் அதனை செய்யவுள்ளேன்,

ஓவ்வொரு நாளும் இலங்கை மீதான அழுத்தங்கள் இந்த விடயத்தில் அதிகரித்து வருகின்றன, இலங்கையிடம் கேட்கப்படும் கேள்விகள் கடினமானவையாக, விடையளிக்கமுடியாதவையாக மாறி வருகின்றன. சர்வதேவிருதிற்கான நியமனம் இந்த அழுத்தத்தை அதிகரிக்கும் என கருதுகிறோம்,

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இதனை நாங்கள் செய்யவில்லை,யுத்தத்தின் போது இருதரப்பும் இழைத்த மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகள் வெளிவரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.இதுவே சமாதனம், நீதி, நல்லிணக்கம்,நீண்ட கால அநீதிகளுக்கா அரசியல் தீர்வை தேடுதல் போன்ற முயற்சிகளுக்கு அவசியமானது.

யுத்தத்திற்க்கு பின்னர் வடக்குகிழக்கில் உட்கட்டுமான வசதிகளில் பாரிய முதலீடு செய்யப்பட்டுள்ளது.எனினும் இதன் பின்னாலுள்ள நோக்கங்கள் குறித்து கடும் கேள்விகளை கேட்கவேண்டும் என (புலி பினாமி) கலும்மக்ரே

குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment