Monday, October 20, 2014

புலிகளின் தடை நீக்கப்பட்டமைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு!

Monday, October 20, 2014
புலிகளின் தடை நீக்கப்பட்டமைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிடப்படவுள்ளது.
 
இலங்கையின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவர் ரொட்னி பெரேரா, இன்று ஐரோப்பிய நாடாளுமன்ற முழுமை அமர்வில் பங்கேற்கவுள்ளார்.
இதற்காக அவர், ஸ்ராஸ்பேர்க்குக்கு செல்கிறார்.
 
ஐரோப்பிய நாடாளுமன்றம் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டு குழுக்களை கொண்டு இயங்குகிறது.இதன்போது இலங்கையின் சார்பில் ரொட்னி பெரேரா,புலிகள் மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கியமை தொடர்பில் இலங்கையின் எதிர்ப்பை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
கடந்த வியாழக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் புலிகளுக்கு எதிரான தடையை நீக்க உத்தரவிட்டது.
எனினும் மூன்று மாதக்காலப்பகுதிக்குள் இது தொடர்பில் ஆட்சேபனை மனுவை  தாக்கல் செய்ய அவகாசத்தையும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் வழங்கியுள்ளது.
 
ஐரோப்பாவை தவிர, இந்தியா, அமரிக்கா, கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் விடுதலைப்புலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment