Wednesday, October 29, 2014

ஐ.நா. பயங்கரவாத தடுப்புக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாழ் விஜயம்!

ஐ.நா. பயங்கரவாத தடுப்புக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாழ் விஜயம்!
UN 1
UN 2
UNITED
Wednesday, October 29, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்புக்குழுவின் நிர்வாக இயக்குனரகத்தின் (UN Counter Terrorism Committee Executive Directorate)   நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜீன் போல் லபோர்டி தலைமையிலான குழுவினர் இன்று (29) யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணம் வருகை தந்த ஐக்கிய நாடுகளின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜீன் போல் லபோர்டி தலைமையிலான குழுவினர் நண்பகல் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட  அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம்,  கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்,  முல்லைத்தீவு மாவட்ட  அரசாங்க அதிபர் வேதநாயகம், ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது யுத்தத்திற்குப்பின்னர் வடமாகாண அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் வட பகுதி வாழ் மக்களின் தற்போதைய வாழ்க்கை முறைகள் தொடர்பில் இம்மூன்று  அரசாங்க அதிபர்களினால்  ஐக்கிய நாடுகளின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜீன் போல் லபோர்டி தலைமையிலான குழுவினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பொது தகவல் அதிகாரி (UN-CTED)  மத்தியாஸ் சுந்தோல்ம், UNODC பிரதிநிதி பிலிப் ஜே பி டிவேத்ட், சிரேஷ்ட மனித உரிமைகள் ஆலோசகர் (UN-CTED)  எட்வர்ட் ஜே  பிளைன், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தொடர்பு அலுவலர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் இணைப்பு அலுவலர் ஆகியோர் இச்சந்திப்பில் இணைந்திருந்தனர்.

No comments:

Post a Comment