Thursday, October 2, 2014

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் 98 சத வீதத்திற்கும் அதிகமாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன: பிரிகேடியர் ருவன் வணிகசூரிய!

Thursday, October 02, 2014
இலங்கை::வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் 98 சத வீதத்திற்கும் அதிகமாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் மேலும் சுமார் 80 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பே கண்ணி வெடிகள் அகற்ற எஞ்சியுள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
அவ்வாறு கண்ணிவெடிகள் அகற்றப்படுவதற்காக காட்டுப் பகுதிகளே அதிகமாக எஞ்சியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
பாதுகாப்பு மற்றும் சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுபிடியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்றது இதன் பிரிகேடியர் மேலும் விளக்கமளிக்கையில் :-
 
யூத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர். வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சுமார் 5000 சதுர கிலோ மீPட்டர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளது என்றும் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், இவற்றில் 2064 சதுர கிலோ மீட்டர் அபாயகர பகுதிகள் என அடையாளங் காணப்பட்டது. இவற்றை தற்பொழுது 80 சதுர கிலோ மீட்டராக குறைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
 
உலகில் இது போன்ற மோதல் இடம்பெற்ற வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறுகிய காலத்தில் சர்வதேச தரத்தில் கண்ணிவெடிகளை அகற்ற கிடைத்தமை பாரிய வெற்றியாகும் என்றும் பிரிகேடியர் சுட்டிக் காட்டியார்.
 
வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்ப, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இதற்கு மேலதிகமாக அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலுமே மிகவும் குறைந்த பிரதேசங்கள் என்ற அடிப்படையில் 80 சதுர கிலோ மீட்டர் பரப்பு எஞ்சியுள்ளது என்றார்.
 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் கண்ணிவெடிகள் அகற்றும் அதிகார சபையின் வழிகாட்டலில் இராணுவமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டிய அவர், இவற்றில் 68 சத வீதமானவையை இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவினரே மேற்கொண்டனர் என்றும் தெரிவித்தார்.
 
இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீரவும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment