Tuesday, September 2, 2014

திவிநெகும வேலைதிட்டத்தின் கீழ் 'சஹன அருண' கடன் வழங்கும் தேசிய நிகழ்வுநேற்று நாடெங்கிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது!

Tuesday, September 02, 2014
இலங்கை::திவிநெகும வேலைதிட்டத்தின் கீழ் 'சஹன அருண' கடன் வழங்கும் தேசிய நிகழ்வு  நேற்று நாடெங்கிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வறுமையற்ற தேசத்தினை உருவாக்குவோம் என்னும் தொனிப்பொருளில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் வழிகாட்டலின் கீழ் இந்த தி;ட்டம் இன்று நாடெங்கிலும் நடைபெறுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  29 வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகளில் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 3003 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

5000 ரூபா தொடக்கம் 50000 ரூபா வரையில் கடன்கள் வழங்கப்பட்டு வருவதுடன் ஒரு வருடம் எந்தவித கட்டணங்களும் செலுத்த தேவையில்லை.அடுத்துவரும் 24 மாதங்களில் அந்த தொகையினை செலுத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.அத்துடன் வருடாந்த வட்டியாக 4 வீதம் மட்டுமே அறிவிடப்படுகின்றது.

இதன் ஆரம்ப முதல் நிகழ்வாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் கே.குணரெட்னம்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் மூலம் இலங்கையில் 27 இலட்சம் குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது பெரியகல்லாறு,கோட்டைக்கல்லாறு,துறைநீலாவனை ஆகிய பகுதிகளில் உள்ள வறுமை நிலையில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட  230 குடும்பங்களுக்கு கடன் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

இதன்போது கிராம சேவையாளர்கள்,வாழ்வின் எழுச்சி வங்கியின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment