Tuesday, September 2, 2014

அம்பாறை உள்ளூராட்சி மன்றங்கள் முத்திரை வரி நிதியை இலகுவாகப் பெறுவது தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்!.

Tuesday, September 02, 2014
இலங்கை::அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தமக்கான முத்திரை வரி நிதியை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் தொடர்பிலான உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
 
ஆசிய பவுண்டேஷன் அனுசரணையில் அதன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் அவர்களின் ஒருங்கிணைப்புடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சு மற்றும் மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
 
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள், கணக்காளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
 
இதில் கிழக்கு மாகாண இறைவரித் திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு உள்ளூராட்சி மன்றங்கள் தமக்கான முத்திரை வரி நிதியை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
 
அத்துடன் கல்முனைப் பிராந்திய காணிப்பதிவு அலுவலக பதிவாளர் ஜமால் முஹம்மட் உட்பட மற்றும் பல அதிகாரிகளும் கருத்துரைகள் வழங்கினர்.
இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றங்கள் தமக்கான முத்திரை வரி நிதியை பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள், கால தாமதங்கள் மற்றும் இடர்பாடுகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் இலகுவான வழிமுறைகள் பற்றியும் விரிவாக ஆராயபட்டது.
 

No comments:

Post a Comment