Friday, September 19, 2014

தனிநாடு கருத்து வாக்கெடுப்பு: பிரிட்டனில் இருந்து பிரிய ஸ்காட்லாந்தில் ஆதரவு இல்லை!

Friday, September 19, 2014
எடின்பர்க்::பிரிட்டனில், ஸ்காட்லாந்து கடந்த 1707–ம் ஆண்டு இணைந்தது. 307 ஆண்டுகள் இணைந்திருந்த நிலையில் தற்போது ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடு ஆக அதன் முதல்–மந்திரி அலெக்கால்மண்ட் தலைமையில் ஒரு அணி வலியுறுத்தியது. பிரிட்டனில் இருந்து பிரியக்கூடாது என அலிஸ்டர் யார்லிங் தலைமையில் மற்றொரு அணி எதிர்ப்பு தெரிவித்தது.

அதை தொடர்ந்து ஸ்காட்லாந்து தனி நாடு ஆவதா? வேண்டாமா என்பது குறித்து தீர்மானிக்க நேற்று கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பு ஸ்காட்லாந்தின் 32 பகுதிகளில் நடைபெற்றது. அதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடனும், உணர்ச்சிவசப்பட்டும் வாக்களித்தனர். பல பகுதிகளில் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஓட்டுப்பதிவு இந்திய நேரப்படி நள்ளிரவு 2.30 மணிக்கு முடிந்தது. அதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கெடுப்பு நடந்த 32 பகுதிகளில் 29 பகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியானது. அதில், 25 பகுதிகளில் ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 பகுதிகளில் மட்டுமே இங்கிலாந்தில் இருந்து பிரிய ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிய எடுத்த முதல்-மந்திரி முயற்சி தோல்வியில் முடிந்தது.

No comments:

Post a Comment