Saturday, August 23, 2014
புலிகளின் தமிழீழ வைப்பகம் மூலம் கொடுப்பனவுகளை பெற்ற தமிழக அரசியல்வாதிகள்
பற்றிய தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாக பாரதீய ஜனதா கட்சியின்
தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
புலிகளின் தமிழீழ
வைப்பகத்தின் மூலம் பணம் பெற்றதமிழக அரசியல்வாதிகள் பற்றிய உறுதியான
தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் சுவாமி கூறியுள்ளார். கொழும்பில்
அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் மாநாட்டில் கலந்து கொண்ட
சுப்ரமணியம் சுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
முல்லைத்தீவில் இருந்த புலிகளின் பதுங்குழி ஒன்றில் இருந்து,
புலிகளின் ஆதரவாளர்களுக்கு, புலிகள் வழங்கிய பணம் மற்றும் அது பற்றிய
தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தம்வசம் இருப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment