Sunday, August 24, 2014

இலங்­கையில் இந்­திய ஆதிக்­கத்தை நிலை­நி­றுத்த மோடியின் அர­சாங்கம் தமிழ்த்­ தே­சிய கூட்­ட­மைப்பை பயன்­ப­டுத்தும்: வசந்த பண்டார!

Sunday, August 24, 2014      
இலங்­கை::இலங்­கையில் இந்­திய ஆதிக்­கத்தை நிலை­நி­றுத்த மோடியின் அர­சாங்கம் தமிழ்த்­  தே­சிய கூட்­ட­மைப்பை பயன்­ப­டுத்தும் அதே­வேளை, கூட்­ட­மைப்பு இந்­தி­யாவை பயன்­ப­டுத்தி இங்கு தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுக்­கின்­றது என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
 
தமிழ்த் ­தே­சி­யக்­  கூட்­ட­மைப்பின் இந்­திய விஜயம் தொடர்­பாக கருத்து தெரி­வித்த போதே தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச்செ­ய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேற்கண்ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்­பாக இவர் மேலும் தெரி­விக்­கையில், 
 
இந்­தி­யாவின் அர­சியல் பொரு­ளா­தார இரா­ணுவ ஆதிக்­கத்தை இலங்­கைக்குள் நிலை­நாட்ட எமது நாட்டை அடி­மைப்­ப­டுத்தும் முயற்­சிகள் இன்று உத்­வே­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.இந்­திரா காந்­தியின் ஆட்சி காலத்தில் தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு ஆயு­தப் ­ப­யிற்­சி­களை வழங்கி இலங்­கையில் பிரி­வினைவாதத்தை ஏற்­ப­டுத்தும் முயற்­சி­க­ளுக்கு வித்­தி­டப்­பட்­டது. அந்த முயற்சி இன்று தோல்வி கண்டு விட்­டது. இதனால் தமிழ் தேசி­யக்­ கூட்­டமைப்பின் ஈழக்­க­னவும் கலைந்து விட்­டது.
 
இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் மோடியின் அர­சாங்கம் மீண்டும் தமது முயற்­சியை ஆரம்­பித்­துள்­ளது. கூட்­ட­மைப்பை பயன்­ப­டுத்தி இலங்­கையை அடி­மைப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை மோடியின் அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ளது.
 
அதே­போன்று இந்­தி­யாவை பயன்­ப­டுத்தி இலங்­கையில் தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் நிகழ்ச்சி நிரலை கூட்­ட­மைப்பு முன்­னெ­டுக்­கின்­றது.
இங்கு பிரி­வி­னையை ஏற்­ப­டுத்தும் முயற்சி தோல்­வி­யுற்றால் சமஷ்டி முறை­மையை கொண்டு வந்து இந்­தி­யாவின் தேவைக்­கேற்ப எமது நாட்டை ஆட்­டு­விப்­பதே நோக்­க­மாகும்.
 
அதற்­கா­கவே மர­ணித்துவிட்ட 13ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும் அதி­கா­ரத்தை பர­வ­லாக்­கு­மாறும் அழுத்தம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது.
மர­ணித்து விட்ட 13க்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும். இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணியாது அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

No comments:

Post a Comment