Saturday, August 23, 2014

13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்(ஆயித) தீர்வைப் பெற்றுக் கொடுக்க இந்தியா உதவுமாம்: - தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு!

Saturday, August 23, 2014
13ஆவது அரசியல் திருத்தத்துக்கு அப்பால் சென்று (புலிகூட்டமைப்புக்கு) தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க இந்திய அரசு உதவும் என்று தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினரிடம் உறுதியளித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
 
இந்த தகவல்களை தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமரிடம் நாம் இலங்கைப் பிரச்சினை குறித்த பல்வேறு விடயங்களை விரிவாகப் பேசினோம். இந்தச் சந்திப்பு எமக்கு திருப்திகரமாக அமைந்தது.
 
எங்கள் கருத்துக்களை கேட்டறிந்த அவர், "எனது பதவியேற்பு நிகழ்வுக்கு வந்திருந்த இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நான் தெளிவாக விளக்கியிருந்தேன். அவரும் அதை நன்றாக உணர்ந்திருக்கிறார்" என்று மோடி எங்களிடம் தெரிவித்தார். அத்துடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் காத்திரமான நடவடிக்கையை எடுக்க இந்தியா அக்கறையுடன் செயற்படும். 13ஆவது அரசியல் திருத்தத்தில் சொல்லப்பட்ட அதிகாரங்களிலும் கூடுதல் அதிகாரங்களை இலங்கை அரசு (புலிகூட்டமைப்புக்கு) தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று இந்திய அரசு இலங்கையிடம் வலியுறுத்தும்.
இதற்காக இலங்கை அரசுடன் நாம் பேசுவோம் என்றும் அவர் எம்மிடம் உறுதியளித்தார். தமிழ் தலைவர்களும் இந்தியாவுடன் தொடர்புகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் கோரினார். அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திக்க தான் விரும்புகிறார் என்றும் அவரை வரவேற்று சந்திப்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்றும் மோடி எம்மிடம் தெரிவித்தார். என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
முன்னதாக, சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இன்று முற்பகல் 10 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் மோடியைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது. இதன்போது இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பிரதமருக்குக் கூட்டமைப்பினர் எடுத்து விளக்கினர்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ( புலிகள் ஆதரவு) தமிழ் மக்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்றபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது பூர்வீக நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களது காணிகளை அபகரிக்கும் அரசு, அங்கு சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றது.
அதுமட்டுமன்றி அவர்களது பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு, ( புலிகள் ஆதரவு) தமிழர் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும், அது வெறும் அதிகாரமற்ற சபையாகவே உள்ளது. அதிகாரங்களைத் தன்வசம் வைத்துள்ள மஹிந்த அரசு, வடக்கு மாகாண சபையை சுதந்திரமாகச் செயற்படவிடாது தடுத்துவருகிறது. இதுபோன்ற நெருக்கடிகளுக்குள்ளேயே ( புலிகள் ஆதரவு) தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். 13ஆவரது திருத்தம் குறித்து இழுத்தடிப்புக்கள் தொடர்கின்றன.
எனவே அந்த சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியா விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் அர்த்தமுள்ள அரசியல் தீர்வொன்றுக்கு செல்ல இலங்கை அரசை இந்தியா கோரவேண்டும். இதுவே ( புலிகள் ஆதரவு) தமிழ் மக்களது விருப்பமாகும் இவ்வாறு ( புலிகள் ஆதரவு) கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறினர்.

No comments:

Post a Comment