Saturday, August 23, 2014

யாழ்.மாவட்ட கொக்குவில் ரயில்பாதை அமைப்பு தொடர்பில் அமைச்சர் ஆலோசனை!

Saturday, August 23, 2014
யாழ்.மாவட்டத்தில் ரயில்வே பாதை அமைக்கப்பட்டுவரும் நிலையில் பிரதான பாதைகளை ஊடுருவும் ரயில்பாதைகளின் அமைப்பு முறைமை தொடர்பாகவும் உள்ளக வீதிகள் குறுக்கிடும் ரயில்பாதையில் தடுப்புகள் மற்றும் மின்சமிக்ஞைகள் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 
 
பிரதான வீதிகளை ஊடுருவிச் செல்லும் ரயில்பாதைகளின் அமைப்பு முறைமை காரணமாக பாதசாரிகளும் வாகனங்களின் போக்குவரத்தும் பெரிதும் பாதிப்புகளுக்கு உட்படுவதாக எடுத்து விளக்கியுள்ள அமைச்சர் அவர்கள், 
எனவே இம்முறைமையை இலகுபடுத்துமாறும், அதேநேரம் உள்ளக வீதிகள் குறுக்கிடுகின்ற ரயில்பாதைகளில் வீதித்தடைகள் மற்றும் சமிக்ஞை விளக்குகளை அமைக்குமாறும் இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவ்வதிகாரிகளுக்கு இன்று ஆலோசனை வழங்கியதுடன் இவ்வாறான இடங்களை தான் நேரில் பார்த்து மேலும் ஆராய்வதாகவும் தெரிவித்ததார்.
 
இதன்போது கொக்குவில் உடையார் மற்றும் பிறவுன்வீதி ரயில் பாதை கடவைகள் தொடர்பில் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களையும் எடுத்துரைத்தனர்.
 
இச்சந்திப்பில் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, ரயில்பாதை அமைப்புக் குழுத் தலைவர் பொறியியலாளர் பத்மசிறி, இர்கோன் நிறுவனத்தின் திட்டப் பொறுப்பாளர் கங்காதரன், பொறியியலாளர் கணேசலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment