Sunday, August 24, 2014

சம்பந்தன் தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு குழுவினர் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே தீர்வு குறித்து பேச வரவேண்டும்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!

Sunday, August 24, 2014      
இலங்­கை::சம்பந்தன் தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு குழுவினர் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே தீர்வு குறித்து பேச வரவேண்டும்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!
 
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
இந்த விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படாதது குறித்த தனது கடும் ஏமாற்றத்தை ஜனாதிபதி தனது பிரதிநிதி ஊ;டாக வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் என்னையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுவதை நோக்கமாக கொண்டது, கூட்டமைப்பினர் அரசாங்கத்தை மாற்ற விரும்புகின்றனர், அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான முறுகல் நிலைக்கு இதுவும் ஒரு காரணம். வட மாகாண சபை அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறை வேற்றியதாலேயே நான் ஆளுநரை மாற்றவில்லை, சம்பந்தனும் அவரது கட்சியினரும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும், என்னிடம் வராவிட்டால் அவர்களால் தீர்வுகள் குறித்து பேச முடியாது' என தன்னுடைய பிரதிநிதி ஊடாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் குறித்து கொழும்பு சீற்றமடைவதற்கு இன்னொரு காரணமும் தெரிவிக்கப்படுகின்றது.  இந்திய பிரதமர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தனது பதவியேற்பு விழாவில் சந்தித்தன் பின்னர் அரசாங்க பிரதிநிதி எவரையும் சந்திக்கவில்லை. இந்திய பிரதமரின் முதலாவது உத்தியோக பூர்வ விஜயம் இலங்கை பிரதிநிதி ஒருவருடனேயே இடம்பெற்றிருக்க வேண்டும் என தான் கருதுவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment