Sunday, August 24, 2014

ஆட்சி மாறினாலும் இந்திய அரசின் வெளியுறவு கொள்கையில் மாற்றமில்லை: சாரி ஷேசாத்திரி ராமானுஜன்!

Sunday, August 24, 2014
புதுடெல்லி::இலங்கையில் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு குறித்த பேச்சுக்களை முன்னெடுக்கும்படி இந்தியப் பிரமதர் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு பின்னர் இந்திய அரச தரப்பு தெரிவித்திருப்பது,
 
ஆட்சி மாறினாலும் இந்திய அரசின் வெளியுறவு கொள்கையில் மாற்றமில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளிவிவகாரத்துறை கொள்கைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாரி ஷேசாத்திரி ராமானுஜன் தெரிவித்திருப்பதாவது,
 
இந்திய அரசு மாறிவிட்டது என்பதற்காக இலங்கை குறித்த வெளிவிவகார நிலைமை மாறும் என்று சொல்லமுடியாது. 13 வது திருத்தம் என்பது இந்தியாவுக்கும் இலங்கைக்குமுள்ள ஒரு குத்துப்பாடு. இந்தத் திருத்தத்துக்குள் என்னென்னவோ அவற்றைத்தான் பேசவேண்டும். தீர்வுகாணவேண்டும். இதற்கு கொழும்பு அரசு தயாராகவே இருக்கிறது. தமிழ் கட்சிகள் அதற்கு தயாராக வேண்டும். நாம் எப்போதும் கொழும்பு அரசுக்கு சொல்வது 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில்தான் தீர்வு காணவேண்டும் என்று. இப்போது அந்த எண்ணத்தை மாற்றமுடியாது. மாற்றவும் கூடாது.

13 ஆவது திருத்தத்தில் ஒன்றுமில்லை என்ற எண்ணத்தை வைத்துக்கொண்டு பேச முடியாது. அதில் என்ன பிரச்சினையுள்ளது, என்னதிருத்தம் கொண்டுவரவேண்டும் என்பது குறித்து ஆராயவேண்டும். ஒருகையை இலங்கை அரசு ஒன்றும் செய்யமுடியாது. அவர்களுக்கு காலம் தேவைப்படுகிறது. தமிழ் கட்சிகள் சொல்வது எல்லாம் சரி என்று இல்லை. இலங்கை அரசுக்கும் சில வாதங்கள் இருக்கின்றன. அவர்கள் உட்கட்டுமாக அபிவிருத்திகளைச் செய்திருக்கிறார்கள். எனவே அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறமுடியாது.

ஆனாலும் சிலவற்யை செய்துவிட்டார்கள் என்பதற்காக மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துவிட்டார்கள் என்றும் சொல்லமுடியாது. எனவே தீர்வு விடயத்தில் தமிழ்கட்சிகளும், அங்குள்ள வேறு மாற்றுக் கட்சிகளும் முன்வரவேண்டும். இதுபோல இலங்கை அரசும் முன்வரவேண்டும். இப்படியான சந்தர்ப்பத்தில் பேச்சு நடத்தினால் இலங்கைப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம். வெளிநாட்டு விவகாரங்களில் மத்திய அரசே முடிவுகளை எடுக்கும். தமிழக அரச தலைவர்களின் ஆலோசனை பெறவேண்டும் என்ற அவசியம் கிடையாது. என்றார்.

No comments:

Post a Comment