Sunday, August 24, 2014
இலங்கை::தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு இரண்டு குழுக்களாக செயற்படுவதாக முன்னரும் சில தகவல்கள் கசிந்திருந்தன. தற்போது அது உண்மைதான் என்பது போல ஒரு விடயம் நடைபெற்றிருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 33 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது ஐ.நா இலங்கையின் மீதான விசாரணைக்காக வரையறுத்திருக்கும் காலத்தை 1974 வரை நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் இடம்பெற்றதை இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைமையுடன் எந்தவிதமான கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை.
இலங்கை::தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு இரண்டு குழுக்களாக செயற்படுவதாக முன்னரும் சில தகவல்கள் கசிந்திருந்தன. தற்போது அது உண்மைதான் என்பது போல ஒரு விடயம் நடைபெற்றிருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 33 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது ஐ.நா இலங்கையின் மீதான விசாரணைக்காக வரையறுத்திருக்கும் காலத்தை 1974 வரை நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் இடம்பெற்றதை இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைமையுடன் எந்தவிதமான கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை.
இது பற்றி ஊடகங்கள் தமிழரசு கட்சியின் செயலாளரும் கூட்டமைப்பின் சட்டபூர்வ செயலாளருமான மாவை சேனாதிராஜாவிடம் கேட்ட போது, அது பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. சிலர் தங்கட பாட்டில் ஏதோ செய்திருக்கின்றனர். என்று தெரிவித்திருக்கின்றனர். மேலும் மாவை இது ஒரு சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை என்றும், இது தொடர்பில் நாங்கள் விசாரிக்கவுள்ளோம் என்றும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் வேறு சிலர் இது சம்பந்தனின் அரசியல் முன்னெடுப்புகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் புலம்பெயர் குழுவொன்றின் சதி நடவடிக்கை என்று கூறுகின்றனர்.
இந்த விவகாரம் பற்றி விசாரித்தறிந்த போது, சில தகவல்களை சேகரிக்க முடிந்தது. இந்த நடவடிக்கை டெலோவின் சார்பில் வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் சிவாஜிலிங்கத்தின் தலைமையில்தான் இடம்பெற்றுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயலாளராக இருக்கின்ற நவிப்பிள்ளை அப்பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், இப்படியொரு மனுவை அனுப்ப வேண்டுமென்று சிவாஜிதான் ஆலோசனை கூறியிருக்கிறார். அதற்கான மனுவும் அவராலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படியான மனுவொன்றை ஆங்கிலத்தில் தாயாரிக்கும் ஆற்றல் அவருக்கு இல்லை.
எனவே புலம்பெயர் தரப்பினரோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற எவரோ அதனை தயாரித்துக் கொடுத்திருக்கலாம். தயாரிக்கப்பட்ட மனுவை வடக்கு கிழக்கில் உள்ள கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இதில் பலரும் கையெழுத்திட்டிருக்கின்றனர். வடக்கு மாகாண சபையை பொறுத்தவரையில் அனைத்து உறுப்பினர்களும் அந்த மனுவில் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஆனால் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதில் கையெழுத்திடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் ஒரு சிலர் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஆனால் கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சி. தண்டாயுதபாணி அதில் கையெழுத்திடவில்லை. வடக்கு முதலமைச்சரும், கிழக்கு மாகாண சபைக்கு கூட்டமைப்பின் சார்பில் தலைமைத்துவம் வழக்கும் தண்டாயுதபாணியினதும் ஆதரவின்றியே மனு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் யாருடைய தலைமையின் கீழ் செயற்படுகின்றனர் என்னும் கேள்வி எழுந்துள்ளதாக கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆனால் இது குறித்து தேர்தல் காலத்தில் கூட்டமைப்பின் சார்பில் மேடை போடாமல் பிரச்சாரம் செய்யும் ஊடக ஜாம்பவான்கள் எவரும் வாய் திறக்கவில்லை.
இது பற்றி சில சுவாரசியமான தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிவாஜிலிங்கத்தின் மனுவில் என்ன இருந்தது என்றே படித்து பார்க்காமலே சிலர் அதில் கையெழுத்திட்டிருக்கின்றனர். இதில் கிழக்கு மாகாண சபையைச் சேர்ந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களான நாகேஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரன் ஆகியோருக்கு அது ஆங்கிலத்தில் இருந்ததால் அதில் என்ன இருக்கின்றது தெரியாமல் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஆனால் மனு ஐ.நாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர், அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான போதுதான், அந்த மனுவில் இப்படியெல்லாம் விடயங்கள் இருக்கின்றன எனத் தெரியாமல் கையெழுத்து வைத்து விட்டோமே என்று கூறியிருக்கின்றனர். இப்படியொரு நிலையில்தான் கூட்டமைப்பு இருக்கிறது.
வடக்கு மாகாண சபை நிறுவப்பட்ட பின்னர் கூட்டமைப்பு வட்டாரங்களுக்குள் வடக்கு மாகாண சபை முன்வைத்து ஒரு அரசியலும், கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற சம்பந்தனின் தலைமையில் பிறிதொரு அரசியலுமே காட்சிப்படுத்தப்படுகின்றது. வடக்கு மாகாண சபைக்குள் டெலோ சிவாஜிலிங்கம் மற்றும் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியான அனந்தியும் வடக்கு மாகாண சபைக்குள் சம்பந்தனின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் அரசியலுக்கு தலைமை வழங்கிவருகின்றனர்.
இன்னொரு பக்கம் கூட்டமைப்பின் புலி என்று வர்ணிக்கப்படும் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சம்பந்தனுக்கு எதிராக ஆட்களை திரட்டி இன்னொரு அரசியலுக்கு தலைமை வகிக்கின்றார். இதற்கிடையில் வடக்கு மாகாண சபையை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றுவரும் அரசியல் விடயங்கள் தனது நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக, கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கிவரும் தண்டாயுதபாணி சம்பந்தனிடம் முறையிட்டிருக்கிறார். ஒட்டு மொத்தத்தில் கூட்டமைப்புக்குள் சம்பந்தனுக்கு ஆதரவானவர்கள், சம்பந்தனுக்கு எதிரானவர்கள் என்று இரண்டு அணிகள் திட்டவட்டமாக உருவாகிவிட்டன. இதனை எதிர்கொள்ள முடியாத சம்பந்தன் தனக்கு ஆதரவான ஊடகக்காரர்களிடம் ஏன் தம்பி இவர்கள் இப்படிச் செய்கின்றார்கள் என்று கேட்கிறாராம். இதில் சிலரது நிலைமையோ இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறது. முக்கியமாக வடக்கு மாகாண சபையில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்கள் சிலர், அங்கு நடைபெற்றுவரும் விடயங்கள் கோமாளித்தனமாக இருப்பதாகவே, தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கூறி குறைப்படுகின்றனர். குறிப்பாக சிவாஜிலிங்கத்தின் நடவடிக்கைகளை அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடவடிக்கை என்றே கருதுகின்றனர்.
ஆனால் தாங்கள் அதற்கு இணங்குவது போன்று பாசாங்கு செய்யாவிட்டால், தங்களை துரோகியாக்கிவிடுவார்கள் என்னும் அச்சத்தின் காரணமாகவே, தாம் உடன்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிவாஜிலிங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் மனுவில் பலர் கையெழுத்திட்டிருப்பதும் கூட, அப்படிப்பட ஒன்றுதான் என்றே அவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு செய்தியை பார்க்க முடிந்தது. இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்னும் தொனிப்பொருளில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று வருகிறதாம். இதிலும் கூட்டமைப்பற்குள் இரண்டு விளையாட்டு அணிகள் உண்டாம். தற்போது இரண்டு அணிகளும் ஒரு நாள் போட்டியொன்றில் குதித்திருக்கின்றனராம். சம்பந்தன் இன்றுவரை எங்குமே இனப்படுகொலை என்னும் சொல்லை தவறியும் உச்சரித்ததில்லை. ஏனெனில் சம்பந்தனைப் பொறுத்தவரையில் அப்படிக் கூற முடியாதென்றே அவர் கருதுகின்றார். சுமந்திரன் அதற்கான சட்ட விளங்கங்களை தாராளமாகவே வாரி வழங்கியிருக்கின்றார்.
ஆனாலும் கூட்டமைப்பிற்குள் இருக்கும் அந்த முருங்கைமர வேதாளங்களை இன்றுவரை சம்பந்தனாலோ அல்லது சுமந்திரனாலோ வெல்ல முடியவில்லை. இதனால் இனப்படுகொலையா - இல்லையா என்னும் வகையிலும் இப்போது பட்டிமன்றங்கள் ஆரம்பித்திருக்கின்றனவாம். ஆனால் துரதிஷ்ட வசமாக இந்த பட்டிமன்றங்களை தமிழ் மக்களால் தான் கேட்க, பார்க்க முடியாமல் போய்விட்டது. மொத்தத்தில் கூட்டமைப்பிற்குள் இருக்கும் ஒரு அணியினரும் தற்போது கோதாவில் குதித்திருக்கின்றனர். வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கிட்டதட்ட தமிழ் மக்களின் அரசியல் தற்போது விஜய் தொலைக்காட்சியில் வரும் தலைப்புகளுக்கு இணையாகிவிட்டது. கூட்டமைப்பு பெரிதாக நம்பியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினை அடிப்படையாகக் கொண்டே கூட்டமைப்பு பிளவுற்றிருப்பதுதான் இதில் உள்ள பெரிய சோகமென்று கவலைப்படுகின்றனர் கூட்டமைப்பிற்கு நெருக்கமானவர்கள்.


No comments:
Post a Comment