Sunday, August 24, 2014

இலங்கை இறைமைக்கு எதிராக இநிதியாவில் கருத்து: பாராளுமன்ற வெளிவிவகார குழுவுக்கு அறிவிக்காமலும் அந்த குழுவின் அனுமதியின்றியும் தமிழத்தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு சென்றது எவ்வாறு: கட்சிகள் கேள்வி!

Sunday, August 24, 2014      
இலங்­கை::பாராளுமன்ற வெளிவிவகார குழுவுக்கு அறிவிக்காமலும் அந்த குழுவின் அனுமதியின்றியும் தமிழத்தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு சென்றது எவ்வாறு என கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரபூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதானால் சபாநாயகரின் அனுமதியுடன் பாராளுமன்ற வெளிவிவகாரக் குழு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அவ்வாறு எந்த ஏற்பாடுகளும் இன்றி இலங்கை அரசாங்கத்தின் இறைமைக்கு எதிராக இநிதியாவில் கருத்துக் கூறியுள்ளதாக ஹெல உறுமயவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் / கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன
 
இந்திய பிரதமர் நரேந்திரமோடி வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சிவ்ராஜ் உட்பட இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள், சிங்கள குடியேற்றங்கள் குறித்து அவர்கள் முன்வைத்த குற்றச் சாட்டுக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்றும் அந்த உறுப்பினர் ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் பாராளுமன்றதிலும் விசேட பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரவுள்ளதாகவும் கூறியதாக   செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் கூட்டமைப்பின் இந்திய பயணம் தொடர்பாக ஜனாதிபதியிடம் விசனம் தெரிவித்ததாக உள்ளக தகவல் தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் இந்தியப் பயணம் எதிர்காலத்தில் ஆபத்தை எற்படுத்தும் என்றும் ஆகவே இவ்வாறான பயணங்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதாகவும்; அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில்  கூறியதாகவும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment