Wednesday, June 04, 2014
இலங்கை::எதிர்வரும் 14ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள சர்வதேச குருதி நன்கொடையாளர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் குருதி நன்கொடையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
உயிரைக்காக்க உதிரம் கொடுப்போம்,உதிரம் வழங்கி தாயின் சிரிப்பில் குழந்தையின் சிரிப்பை காண்போம் ஆகியவற்றினை கருப்பொருளாக கொண்டு சர்வதேச குருதி நன்கொடையாளர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இந்த வைபவத்தின் ஆரம்பத்தில் அதிதிகள் மற்றும் குருதி நன்கொடையாளர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் இணைப்பாளர் டாக்டர் திருமதி அனோஜா ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு போதனா வதை;தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்பை பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், போதனா வதை;திய சாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் திருமதி எல்.எம்.டி.நவரட்னராஜா,கிழக்கு பலக்லைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி டாக்டர் கே.பி.சுந்தரேசன், கிழக்கு பலக்லைக்கழக விஞ்ஞான மருத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான டாக்டர் கே.இ.கருணாகரன் உட்பட வைத்திய நிபுணர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள், குருதி நன்கொடையாளர்கள் தேசிய இரத்த வங்கியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கிக்கு இரத்த தானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த ஏற்பாட்டாளர்கள் 42 பேர் மற்றும் இரத்ததானம் செய்த 32 நிறுவனங்கள் உட்பட குருதி நன்கொடையாளர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment