Wednesday, June 04, 2014
இலங்கை::இந்திய மீனவர்கள் 29 பேரும் இன்று புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கடந்த சனிக்கிழமை இரவு இலங்கை கடற்கடையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரையும் கடந்த திங்கள்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் முற்படுத்தினர். இதன்போது அனைவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்திய மீகவர்கள் 29 பேரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தனர். எனினும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டிருந்நதார். இந்தப் பணிப்பின் அடிப்படையில் இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரையும், மன்னார் மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்களை இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



No comments:
Post a Comment