Thursday, June 05, 2014
இலங்கை::புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இலங்கை::புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
குறித்த வழக்கு இன்று முல்லைத்தீவு
நீதிமன்ற நீதிபதி ம.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜுலை மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக
அறிவித்தார்.
இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பாக அவர்களின் குடும்ப
உறுப்பினர்களான கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி
காந்தி, அனந்தி சசிதரன், கந்தசாமி பொன்னம்மா ஆகியோரினால் 2009ஆம் ஆண்டில்
வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருந்த குறித்த வழக்கு சட்டமா அதிபர்
திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த
வழக்கு இன்று (05.06.14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா
அதிபர் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட அரச சட்டத்தரணி, மன்றிற்கு
சமூகமளிக்கவில்லை. இதனால் குறித்த வழக்கினை ஜுலை 21 ஆம் திகதிக்கு நீதிபதி
ஒத்திவைத்தார்.
இது தொடர்பாக வடமாகாண சபை அனந்தி சசிதரன் கருத்துத் தெரிவிக்கையில், சட்டமா
அதிபர் திணைக்களத்தினால் முன்னர் நியமிக்கப்பட்ட அரச சட்டத்தரணி ஜனாதிபதி
ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகச் சென்றமையினால் குறித்த வழக்கு இழுபறி
நிலையில் இருந்து வந்தது.
தொடர்ந்து பிறிதொரு அரச சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் மூலம் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி வழக்கு இடம்பெற்றது.
இருந்தும் இன்று (05.06.14) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது
வருகை தரவில்லை. இதனால் இந்த வழக்கு இழுபறி நிலையில் இருந்து வருவதாக
அவர்; தெரிவித்தார்.
ஏறத்தாள 5 வருடங்களாக அரசாங்கமும்
இலங்கையின் நீதித்துறையும் இந்த வழக்கினை காலம் தாழ்த்திச் செல்கின்றன. இது
மட்டும் அல்லாமல் ஆளும் தரப்பிற்கு அல்லது படையினருக்கு எதிரான வழக்குகள்
அனைத்துமே இலங்கையின் நீதிமன்றங்களில் நி’லுவையில் கிடப்பில்
போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment