Friday, June 6, 2014

இலங்கை கடற்படையினரால் பாம்பன் மீனவர்கள் விரட்டியடிப்பு!

Friday, June 06, 2014
ராமேசுவரம்::பாம்பன் பகுதியிலிருந்து புதன் கிழமை காலையில் 50 க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் தலைமன்னார், தனுஸ்கோடி கடல் பகுதியில் சோழம் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். வியாழக்கிழமை அதிகாலையில் அப்பகுதியில் நான்கு சிறிய கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் பாம்பன் பகுதியை சேர்ந்த இன்னாசி என்பவரின் படகை சுற்றி வளைத்து படகிலிருந்த ஜெசன்,இன்னாசி,மெயின்சா,கருப்பையா,ராஜேஸ்,ஜினவின் உள்பட 8 மீனவர்களையும் மிரட்டியுள்ளனர்.பின்னர் வளைகலை சேதப்படுத்தியும், பிடித்துவைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்தும், ,இனிமேல் இந்த பக்கம் மீன்பிடிக்க வரக்கூடாது என் மீனவர்களை மிரட்டிவி்ட்டு  பின்னர் அப்பகுதியிலிருந்து புறப்பட்டு சென்றனர்.
 
இலங்கை கடற்படையினர் சென்றவுடன் மீனவர்கள் அருகாமையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்ற மீனவர்களின் உதவியோடு படகை இழுத்துக்கொண்டு பாம்பன் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
 
பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. நாங்கள் தனுஸ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தோம்.அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை சுற்றி வளைத்தனர்.பின்னர் ஆயுதங்களை கண்பித்து மீரட்டி 20 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை பறி்த்துக்கொண்டு படகு மீது மோதி இனிமேல் இப்பகுதிக்கு மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரி்ததும் மேலும் எங்களுக்கு அருகாமையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 20க்கு மேற்பட்ட படகுகளில் மீன்களை பறி்த்து சென்றனர்.எங்களை சிறைபிடித்து செல்லாமல் வி்ட்டு சென்றதே மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment