Wednesday, June 04, 2014
இலங்கை::மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதனாலோ அல்லது தவிர்ப்பதனாலோ தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை. என ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாது என்ற அரசாங்கத்தின் கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது தமிழ் மக்களுக்கான தீர்வாக அமைய போவதில்லை. தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் சுயாதீன விசாரணையினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சர்வதேச விசாரணையினைக் கோருவது கூட்டமைப்பின் சுயநலப் போக்கினையே வெளிப்படுத்துகின்றது. தமிழர்கள் விடயத்தில் தமிழ் கட்சிகள் கூடிய கவனமெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதனாலோ அல்லது தவிர்ப்பதனாலோ தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை. தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது வடக்கில் சுதந்திரமானதும் தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றினை மட்டுமே.
யுத்த கால கட்டத்தில் புலிகள் செய்தவையும் தமிழ் மக்களை பெரிதும் பாதித்து விட்டதென்பதே உண்மை.
அதனை நிவர்த்தி செய்து சமூகங்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் இன்று அவசியமாக உள்ளது. அதை விடுத்து மாகாண சபைகளுக்கான அதிகாரங்களையும் பொலிஸ் அதிகாரங்களையும் கேட்பது தற்போது அவசியமற்றதே.
மேலும் யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றினைக் கோருவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடகமே. தமது சுயநல அரசியலை செய்வதற்காக தமிழர்களின் வாக்குகளை தக்க வைக்கும் தந்திரத்தினையே கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச விசாரணையொன்று இடம்பெறுவதனாலோ நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை.

No comments:
Post a Comment