Thursday, June 5, 2014

சிரியா தேர்தல்: பஷார் அல் அஸாத்துக்கு வெற்றி வாய்ப்பு!

Thursday, June 05, 2014
 டமாஸ்கஸ்::சிரியாவில் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் பஷார் அல்-அஸாத்துக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது.
 
சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக பஷார் அல்-அஸாத் குடும்பத்தினரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து 2011-ல் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. அதன்பின் சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டில் உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் பஷார் அல்-அஸாத் உள்பட 3 பேர் களத்தில் உள்ளனர்.
 
முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில் அதிபர் பஷார் அல்-அஸாத் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அவர் வெற்றி பெற்றால் 3-வது முறையாக அதிபர் பொறுப்பேற்று 7 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். இத்தேர்தல் கண்துடைப்பு நாடகம் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment