Thursday, April 24, 2014

மாயமான விமானம் குறித்து சர்வதேச விசாரணை : மலேசிய அரசு ஒப்புதல்!

Thursday, April 24, 2014
கோலாலம்பூர்::மலேசியாவில் இருந்து சீனாவுக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவழியில் காணாமல் போன சம்பவம் குறித்து சர்வதேச நாடுகளின் விசாரணைக்கு மலேசிய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
 
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த மாதம் 8ம் தேதி இரவு 239 பயணிகளுடன் சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் இந்திய பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது, மர்மமான முறையில் காணாமல் போனது. காணாமல் போன விமானத்தை சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இன்று வரை தேடி வருகின்றன. விமானத்தின் கறுப்பு பெட்டியை இந்திய பெருங்கடலில் தே டும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மலேசிய விமானம் காணாமல் போனது குறித்து சர்வதேச விசாரணைக்கு மலேசிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
இந்த சர்வதேச குழு, விமானம் எப்படி மாயமானது, அதன் பின்னணியில் உள்ள விவரங்கள் குறித்து தீவிரமாக ஆராயும். மேலும் எதிர்காலத்தில் இதுபோல் எந்த தடயமும் இல்லாமல் விமானம் மாயமாவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யும். இதுகுறித்து மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிசாமுதீன் உசைன் கூறுகையில், தென் இந்திய கடல் பகுதியில் காணாமல் போன மலேசிய விமானத்தை ஆழ்கடலில் தேடும் பணி தொடர்பாக எண்ணெய் நிறுவனம் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.

No comments:

Post a Comment