Thursday, April 24, 2014

யங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்றிய போன்று மோசடியான அரசியல்வாதிகளிடம் இருந்தும் நாட்டை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: கெப்பிட்டியாகொட சிறிவிமல தேரர், ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Thursday, April 24, 2014
இலங்கை::நாட்டை மோசடியான அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பற்ற அரசியலுக்கு வரும் நபர்களுக்கு இருக்க வேண்டிய குறைந்தப்பட்ச தகுதிகளை அரசியல் அமைப்புச் சட்டத்திற்குள் உள்ளடக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
கண்டி கெட்டம்பே ராஜோபனாராமய விகாரையின் விகாரபதிபதி கெப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையின் ஆட்சித் தலைவர் ஒருவருக்கு மீண்டும் ஒரு முறை கிடைக்க முடியாத விதமான அதிகாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ளது.
 
இதனை பயன்படுத்தி பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்றிய போன்று நாட்டை மோசடியான அரசியல்வாதிகளிடம் இருந்தும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
நாளுக்கு நாள் நாடு அபிவிருத்தியடைந்து வருகிறது. எனினும் ஊழல்,
மோசடிகளால் நாடு சீரழிந்து வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன.
 
அப்படியான நிலைமை உருவாகி வருகின்றது என்றால், அதில் இருந்து நாட்டை மீட்கக் கூடிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ஷ மாத்திரமே.
தகுதியற்றவர்கள் அரசியலுக்கு வருவதால், ஏற்படும் சமூக சீரழிவுகளை தடுக்கும் நோக்கில் தான் இந்த கோரிக்கையை விடுப்பதாகவும் கெப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment