Thursday, April 24, 2014

மட்டக்களப்பு வாழைச்சேனையில் மீன்பிடி படகில் சிலின்டர் வெடிப்பு: படகு சேதம்,நான்கு பேர் காயம்!

Thursday, April 24, 2014
இலங்கை::மட்டக்களப்பு, வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில்  (செவ்வாய்க்கிழமை) இரவு 07.00 மணியளவில் சமையல் எரிவாயு வெடித்ததில் படகிற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் படகில் சென்ற நான்கு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழம ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக நான்கு பேர் படகில் சென்றுள்ளனர் ஓரு வாரத்திற்கு தங்கி  மீன் பிடிப்தற்குரிய ஆயத்தத்தில் சென்ற படகில் நேற்று இரவு 07.00 மணியளவில் சமையல் வாயுக் கசிவின் வாசம் ஏற்படவும் அவ்விடத்திற்கு என்ன நடந்துள்ளது என்று பார்க்கச் சென்ற போது சமையல் எரிவாயு வெடித்ததாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப் படகிற்கு அருகில் நின்ற படகின் உதவியுடன் நேற்று (23.04.2014) காலை படகையும் காயமடைந்தவர்களையும் கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.

இச் சம்பவத்தில் படகின் மேல் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளதாகவும் மொத்த சேத விபரங்கள் பெறப்படவில்லை என்றும்  கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment