Wednesday, April 2, 2014

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியால் புதிதாக நியமனம்!

Wednesday, April 02, 2014
இலங்கை::வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர் ஐந்து பேருக்கு மாகாண ஆளுநரினால் ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நியமனக் கடிதங்கள் வங்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய ஆனைக்குழுவின் தலைவராக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் பிரதம செயலாளர் எஸ். தியாகலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, இதன் ஏனைய உறுப்பினர்களாக இரண்டு தமிழர்கள் உட்பட சிங்களர் ஒருவரும், முஸ்லிம் ஒருவருமாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்னர். இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பிரதம செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment