Wednesday, April 2, 2014

நாட்டின் தேசிய நலன்களை எந்த சக்தியாலும் தோற்கடிக்க முடியாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, April 02, 2014
இலங்கை::நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி பெற்றுள்ள அமோக வெற்றியின் மூலம் அரசாங்கம் கடைப்பிடிக்கும் மக்கள் நட்புடைய கொள்கைகளுக்கு மக்கள் தெளிவான ஆணையை வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு அந்த வெற்றி தெளிவானதொரு செய்தியை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்கும் அதன் ஆட்புள எல்லையை ஸ்திரப்படுத்துவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர் எனவும் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய நலன்களை எந்த சக்தியாலும் தோற்கடிக்க முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ள சனாதிபதி நாட்டை நேசிக்கும் மக்கள் ஒருபோதும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்றும் சனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 
மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது என்றும் சனாதிபதி குறிப்பிட்டார். இத்தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு உதவி செய்த எல்லோருக்கும் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment