Wednesday, April 02, 2014
கோவை::கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.பி.நாகராஜனை ஆதரித்து, கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:காங்கிரஸ் கூட்டணி கட்சியின் விலைவாசி உயர்வு, பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசமான மத்திய அரசு இதுவரை இருந்ததில்லை. அ.தி.மு.கவின் 34 மாத ஆட்சி காலத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொழில் துறையில் கோவை சிறப்பாக இருக்கிறது. இங்கேயிருந்து தொழில் நிறுவனங்கள் கர்நாடக மாநிலங்களுக்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. சாம்ராஜ் நகரில் தொழில் நிறுவனங்கள் அமைவதாக கூறுகின்றனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் ரோடு, மின்சாரம், குடிநீர் வசதி கிடையாது. அங்கே கோவை தொழிலதிபர்கள் தொழில் நிறுவனங்கள் அமைக்க எந்த ஆர்வமும் காட்டவில்லை. திட்டகமிஷன் தகவல்படி தொழில் வளர்ச்சியில் தமிழக முதலிடத்தில் இருக்கிறது.

மின் உற்பத்தியில் மிகுந்த அக்கறை காட்டி செலுத்தி வருகிறோம். ஓரிரு நாட்கள் மின் வினியோகத்தில் பிரச்னை இருந்தது. இதை தீராத மின்வெட்டு என பேசி வருகிறார்கள். மின் வினியோகம் சீராக இருக்கிறது.
மாநில அரசுக்கு தீர்க்க முடியாத சில பிரச்னைகள் இருக்கிறது. கச்சத்தீவு, மண்ணெண்ணெய், நிலக்கரி போன்றவை மத்திய அரசு வசம் உள்ளது. மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. மக்களுக்கு துரோகம் செய்து விட்டது. வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் தேவை. 40 தொகுதிகளும் அ.தி.மு.க வெற்றி பெற மக்கள் ஆதரவளிக்கவேண்டும்.

No comments:
Post a Comment