Wednesday, April 02, 2014
இலங்கை::82 சதுர கிலோ மீற்றர் பரப்பிலேயே வடக்கில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படாதுள்ளன
இலங்கை::82 சதுர கிலோ மீற்றர் பரப்பிலேயே வடக்கில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படாதுள்ளன
விரைவில் அவையும் அகற்றப்பட்டுவிடும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார் .
கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது
குறித்து மேலும் தெரிவிக்கையில் - கண்ணிவெடி அகற்ற வேண்டிய 2004 சதுர கிலோ
மீற்றரில் 82 சதுர கிலோ மீற்றரே எஞ்சியுள்ளது .
அதுவும் வனப்பகுதி . கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற
நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒத்துழைப்பு
கிடைக்கப்பெறுகிறது .
கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளைவிட கண்ணிவெடி அகற்றும் பணிகளில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது என்றார் .
No comments:
Post a Comment