Saturday, April 19, 2014

இலங்கை-இந்திய மீனவர்கள் விவகாரம்: அமைச்சு மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்- ராஜித சேனாரட்ன!

Saturday, April 19, 2014
இலங்கை::மீனவர் பிரச்சினைகள் குறித்து அமைச்சு மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டுமென மீன்பிடித்துறை மற்றும் கடல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய மீனவர்கள் அத்து மீறல்களில் ஈடுபடுதல் மற்றும் கைதுகள் தொடர்பில் இரு நாடுகளினதும் அமைச்சு ரீதியான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த மாதத்தில் இவ்வாறானதோர் பேச்சுவார்த்தை நடத்த நேரத்தை ஒதுக்கித் தருமாறு ஏற்கனவே இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளினதும் மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு முன்னதாக அமைச்சு மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தமிழக அரசாங்கம் எதிர்வரும் மே மாதம் 12, 13ம் தேதிகளில் இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு இடையில் கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும், இது குறித்து உத்தியோகப்பூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை எனவும் கடிதங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகப்பூர்வமாக எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை எனவும் மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment