Saturday, April 19, 2014

தேர்வுக்குழுவில் பங்கேற்குமாறு த.தே.கூட்டமைப்புக்கு அரசாங்கம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது!


Saturday, April 19, 2014
இலங்கை::பாராளுமன்றத் தேர்வுக்குழுவில் பங்கேற்குமாறு அரசாங்கம் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. பாராளுமன்றத் தேர்வுக்குழுவின் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளுமாறு தேர்வுக்குழுவின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண மிகச் சிறந்த தளமாக பாராளுமன்றத் தேர்வுக்குழு அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து, அதனூடாக தீர்மானங்களை எடுக்கக் கூடிய வாய்ப்பு பாராளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்வுக் குழுவின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மிதவாத கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மே மாதம் முதல் வாரத்தில் மீண்டும் பாராளுமன்றத் தேர்வுக்குழுவின் அமர்வுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment