Thursday, April 03, 2014
மதுரை::புலி ஆதரவு பினாமிகளின் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை தலைவர் பழ.நெடுமாறன், மதுரை
ஐகோர்ட் கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்த மனு: இலங்கை போரில் பலியான புலிகளின்
நினைவாக, தஞ்சாவூர் விளாரில் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்'
அமைத்துள்ளோம்.
அருகே, நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமாக 13 ஆயிரத்து 475
சதுரடி இடம், பயனற்ற நிலையில் இருந்தது. அங்கு மக்கள் பயன்பாட்டிற்கு
பூங்கா அமைக்க, நெடுஞ்சாலை அனுமதி வழங்கியது. முன்னறிவிப்பின்றி,
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 2013 நவ.,13 ல் முற்றத்தின் சுற்றுச்சுவரை
இடித்தனர்; சுற்றி வேலி அமைத்து, முற்றம் உள்ளே நுழையவும், வெளியே
செல்லவும் தடை ஏற்படுத்தியுள்ளனர்.
சுற்றுச்சுவரை சட்ட விரோதமாக இடித்த
அரசு அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சுவர்
இடிக்கப்பட்ட இடத்தை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும், என
குறிப்பிட்டார்.புலி ஆதரவு பினாமி நெடுமாறன்.
நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி பெஞ்ச்
முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் விஜய்ஆனந்த்
ஆஜரானார். தஞ்சாவூர் கலெக்டர் ஏப்.,21 ல் பதில் மனு செய்ய, நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment