Thursday, April 03, 2014
இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயளாலர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று முல்லைதீவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயளாலர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று முல்லைதீவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது கோப்பாய்பிழவிவ் மீள் குடியேற்றப்பட்ட குடுமபங்களுக்கு இரண்டாம் கட்டமாக 100 வீடுகள் வழங்கும் வைபவமும் விமானப்படை முகாம் வளாகத்திலிருந்து நெற்பயிற் செய்கைக்காக 100 ஏக்கர் நிலம் வழங்கும் வைபவமும் இடம் பெறவுள்ளதுடன் இராணுவ வீரர்களால் மீள் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.
அதைத் தொடர்ந்து மாலையில் அனுராதபுரத்தில் 2 ஆவது பொறியியல் படைப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள 20 கிலோ வோல்ட் மின் உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்தையும், அதே நேரம் இதே கொள்ளவுடன் பூநேவை, மதவச்சி கடற்படைத்தளத்திலும், பாலாவி விமானப்படைத்தளத்திலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்களையும் திறந்துவைக்கவுள்ளார்.

No comments:
Post a Comment