Thursday, April 03, 2014
இலங்கை::சவுதி அரேபியாவில் 2014 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சவுதி அரேபியாவில் 31 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் வீ. கிரிஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கை::சவுதி அரேபியாவில் 2014 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சவுதி அரேபியாவில் 31 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் வீ. கிரிஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அரப் நியூஸ் இணையத்தளம் நேற்று வெளியிட்ட செய்தி தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.
சவுதி அரேபியாவின் பிரேத அறைகளில், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படாத மேலும் 20 சடலங்கள் காணப்படுவதாக, அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
நாளொன்றுக்கு நாட்டிற்கு வெளியே வாழ்ந்து வருகின்ற ஒரு இலங்கையர் வீதம் உயிரிழப்பதாக ரியாத் நகரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
சவுதி அரேபியாவில் உயிரிழந்து பல நாட்களின் பின்னர் இலங்கைக்கு சடலங்கள் கொண்டு வரப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன.

No comments:
Post a Comment